குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, December 29, 2008

வண்டு - சிண்டு - முதல் அத்தியாயம் - இத்துடன் முடிவடைகிறது.

அனைவருக்கும் வணக்கம்.

'வண்டு-சிண்டு' - Season 1 - முதல் அத்தியாயம் , சென்ற வாரக் கதை 11-றுடன் முடிவடைகிறது.

இரண்டாம் அத்தியாயம் இன்னும் 'Planning stage'-ல் உள்ளது. சில மாதங்கள் கடந்த பின், தொடங்க எண்ணியுள்ளேன் :).

இதுவரை, வண்டு-சிண்டுவிற்கு ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

மீண்டும் சந்திப்போம். அதுவரை, இந்த வலைப்பூவில் பழைய 'வண்டு-சிண்டு' கதைகளை, எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பாருங்கள்.

நன்றி.

மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2009.

Monday, December 15, 2008

வண்டு - சிண்டுவின் 'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்' :) - கதை 11

வாங்க வாங்க.

அனைவரும் நலமா? :)

சென்ற முறை கேட்ட பஞ்சதந்திரக் கதை பிடித்திருந்ததா?

இந்த வாரமும் ஒரு கதை கேட்கப்போகிறீர்கள் :). அதுவும் 'கிறிஸ்து பிறந்த கதை' கேட்கப் போகிறீர்கள். இன்னும் 10 நாட்களில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் போகிறோம் அல்லவா? அதனால், இந்தக் கதை, உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் :)

கேட்டு மகிழுங்கள்.

இன்றைய கதை.....'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்'

அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)

வண்டு-சிண்டு அறிமுகக்கதை

இன்றைய கதை.....'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்' :

அகலப்பட்டை - 512 kb:



அகலப்பட்டை 150 kb:



=================================================================

தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள் :).

நன்றி.

மீண்டும் சந்திப்போம்.

அனைவருக்கும் மனம்கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் :)

Monday, December 1, 2008

வண்டு - சிண்டு , 'நரியும் குரங்குகளும்' - கதை 10

வாங்க வாங்க.

அனைவரும் நலமா? :)

சென்ற முறை பாடிய பாடல்கள் பிடித்திருந்தனவா?

இந்த வாரம் ஒரு கதை கேட்கப்போகிறீர்கள் :).

கேட்டு மகிழுங்கள்.

இன்றைய கதை.....'நரியும் குரங்குகளும்'

அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)

வண்டு-சிண்டு அறிமுகக்கதை

இன்றைய கதை.....'நரியும் குரங்குகளும்' :

அகலப்பட்டை - 512 kb:



அகலப்பட்டை 150 kb:



=================================================================

தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள், பாடல்கள், நடனங்கள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள் :).

நன்றி.

மீண்டும் சந்திப்போம்.

Monday, November 17, 2008

வண்டு - சிண்டு , 'அணிலும் மழையும்...' - கதை 9

வாங்க வாங்க.

அனைவரும் நலமா? :)

சென்ற முறை பாடிய பாடல்கள் பிடித்திருந்தனவா? தோசைப் பாடலும், பலூன் பாடலும் உங்களை மகிழ்வித்தனவா? :)

இந்த வாரமும் பாடல்கள் வாரமே :). கண்டு, கேட்டு மகிழுங்கள்.

இன்றைய கதை.....'அணிலும் மழையும்...'

அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)
வண்டு-சிண்டு அறிமுகக்கதை

இன்றைய கதை.....'அணிலும் மழையும்...' : அகலப்பட்டை - 512 kb:



அகலப்பட்டை 150 kb:




================================================================= தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள், பாடல்கள், நடனங்கள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள் :).

நன்றி.

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, November 4, 2008

வண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க' கதை 8

வாங்க வாங்க.

அனைவரும் நலமா? :)

தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியாய்க் கொண்டாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அம்மா செய்த பலகாரங்களும், அப்பாவுடன் வெடித்த வெடிகளும் புத்தாடகளும் மனம் முழுவதும் நிரம்பியிருக்கா? :)

அதே மகிழ்ச்சியுடன்.......

இன்றைய கதை.....'பாடலாம் வாங்க ::)'

அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா?

யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)

வண்டு-சிண்டு அறிமுகக்கதை

இன்றைய கதை.....'பாடலாம் வாங்க ::)' :

அகலப்பட்டை - 512 kb:




அகலப்பட்டை 150 kb:




==================================================================
என் பிள்ளை, இதில் பங்குகொண்டுவிட்டு, மீண்டும் பிஸியாகிவிட்டான் :-). இன்னும் பார்க்கவில்லை. பார்த்தபின் அவன் கருத்துகளைக் கூறுகிறேன்.

படம் ஒளிப்பதிவு செய்யும் போது அவன் சொன்னது:

Mom! i like it very , very , very , very , very , very much. Its nice.

நான்: :D
=================================================================

தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.

நன்றி. மீண்டும் சந்திப்போம்.

Tuesday, October 21, 2008

வண்டு - சிண்டு; கதை 7 வெளிவந்துவிட்டது - காணத்தவறாதீர்கள் ;)

கதை இங்கே

:). நன்றி.

வண்டு - சிண்டு தீபாவளி வாழ்த்துகள்

வணக்கம்.

அனைவரும் நலமா? :)

பொறுமையாய்க் காத்திருந்தமைக்கு நன்றி.

ஆனால், இன்னும் பொறுமை (எனக்கும்) வேண்டும் போலிருக்கிறது.

கதை தயார், ஆனால், வலை ஏற்றம் செய்ய வேண்டிய, 'யூ-டியூப்' Under maintenance-ல் இருக்கிறது.

தற்பொழுது, வீடியோ வலையேற்றம் செய்ய இயலாமல் இருக்கிறேன்.

நாளை, முதல் வேலையாய்ச் செய்கிறேன், செவ்வாய் இரவோ, புதன் காலையோ, கண்டிப்பாய் வரும். :)

நன்றி மக்கா. இப்பொழுது, மணி இரவு 3:30. Technical-ஆய் ரொம்ப பட்டுவிட்டேன். காலை சந்திப்போம். :))..

ZZZZzzzzzzzzzzzzz...

வண்டு - சிண்டு கதை 7 - காணத்தவறாதீர்கள் ;)

வணக்கம்.


அனைவரும் நலமா? :)

பொறுமைக்கு நன்றி :)

வண்டு-சிண்டு கதைகள் சனிக்கிழமைகளிலிருந்து செவ்வாய்க்கு மாறிய பின் வரும் முதல் கதை / வாழ்த்து இது.


ஆம். அடுத்த வாரம் வரும் தீபாவளிக்கான, முன்னோட்டம் இது :)


வண்டு - சிண்டுவின் தீபாவளி வாழ்த்துகள்:

பாகம் 1/3:


பாகம் 2/3 :


பாகம் 3/3:


நாதனும் இதில் ஈடுபட்டிருந்ததால், அவனுக்கு 'நோ கமெண்ட்ஸ்', மிகுந்த மகிழ்ச்சி :)


இந்த முறை சற்று (!!!) நீளமான படம் தான். ஆனால் குழந்தைகளுக்கு, அவசரமில்லாமல், மீண்டும் வீடியோ பார்த்து அல்லது பார்த்துக் கொண்டே வாழ்த்தட்டை தயாரிக்க உதவ வேண்டும் என்றே, நீட்டி விட்டேன்.


தங்கள் கருத்துகளையும், குழந்தைகளின் எண்ணங்களையும் எனக்கு, கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.


அவர்கள் தயார் செய்த வாழ்த்து அட்டையையும் 'ஸ்கேன்' (scan) செய்து எனக்கு அனுப்புங்கள். அக்டோபர் 28, தீபாவளிக்கு மறு நாள் வரை எனக்கு அனுப்புங்கள்.மறக்காமல், குழந்தையின் பெயர், வயது மற்றும் பெற்றோர் பெயர் குறிப்பிட்டு அனுப்புங்கள்.


அனுப்ப வேண்டிய முகவரி : PudhuVandu@gmail.com


எல்லாவற்றையும் சேர்த்து, நாம் ஒரு பெரிய வாழ்த்தட்டை, தயாரிப்போம் சேரியா? :))


நன்றி.


பி.கு: இந்த வீடியோவை 'யூ-டூயுப்'-ல் ஏற்றுவதற்குள் கன்னாபின்னாவென்று பட்டுவிட்டேன். அதிகபட்சம் ஒரு வீடியோ 10 நிமிடம் தான் இருக்கலாமாம் :((

சரி என்று ஒருவழியாய், 3 வீடியோவாய்ப் பிரித்தால், 'யூ-டியூப்' Under maintenance-ல் சென்று விட்டது :((((. என்னத்தைச் சொல்ல.

Friday, October 17, 2008

வண்டு - சிண்டு இனி செவ்வாய் தோறும்

வணக்கம். :)

அனைவரும் நலமா?

இனி வண்டு-சிண்டு கதைகள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சனிக்கிழமைகளில் அல்லாமல், செவ்வாய்க்கிழமையில் வரும். நாளில் மட்டுமே மாற்றம்.

பெரிய காரணம் ஒன்றும் இல்லை. வார நாளில் வெளியிட்டால், தயாரிப்பை வார இறுதிகளில் செய்ய முடிகிறது.அப்பொழுது, இன்னோருவரின் உதவியும் கிடைக்கிறது. ஒரே நபராய், படங்கள் எடுப்பது, சில நேரங்களில் கடினமாய் (கடுப்பாய்) உள்ளது :)

வரும் செவ்வாய்க்கிழமை சந்திப்போமா? நன்றி.

இதில் ஏதும் மாற்றம் வேண்டுமெனில் பின்னூட்டமிடுங்கள்.

கதையிலோ...
கதை சொல்லும் விதத்திலோ...
அல்லது வேறு ஏதிலும் நீங்களோ உங்கள் குழந்தைகளோ, அது வேண்டும் இது வேண்டும் என்று நினைத்தீர்கள்/கேட்டார்களானால் எனக்குத் தெரிவியுங்கள்.

நன்றி. :)

Monday, October 6, 2008

ஆஆஆஆ..அ..அ..பயமாயிருக்கு..-வண்டு சிண்டு கதை 6

வாங்க வாங்க.

அனைவரும் நலமா?

பொறுமையாய்க் காத்திருந்த அனைவருக்கும் நன்றி. :))

இன்றைய கதை.....'ஆஆஆஆ..அ..அ..பயமாயிருக்கு..'

அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)

வண்டு-சிண்டு அறிமுகக்கதை

இன்றைய கதை.....'ஆஆஆஆ..அ..அ..பயமாயிருக்கு..':

அகலப்பட்டை - 512 kb:



அகலப்பட்டை 150 kb:



==================================================================
என் பிள்ளை இன்று பள்ளி சென்ரு வந்து தூங்கிவிட்டான்.இன்னும் இந்தக் கதையை அவன் கேட்கவில்லை(சென்ற கதை உட்பட.பள்ளியில் பயங்கர பிஸி-யாம் அவர் :)) )
=================================================================

தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.

நன்றி.

தொடர்ந்து, பொறுமையாய், கதை கேட்டு, எனக்கு ஊக்கமளித்து, பின்னூட்டமிட்டு, தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் நல்லுள்ளங்களுக்கு சிறப்பு நன்றி.குறிப்பாய் ராமலக்ஷ்மி, சீனா ஸார் மற்றும் தம்பி தமிழ் பிரியனுக்கு :)

நிலா பாப்பா, ஏன் கொஞ்ச நாளாக் காணும். யாராவது கேட்டு சொல்லுங்களேன்.

நன்றி.

Saturday, October 4, 2008

இந்த வார வண்டு-சிண்டு கதை தாமதமாக வரும்.

வணக்கம்.

அனைவரும் நலமா?

தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த வார வண்டு-சிண்டு கதை சற்றுத் தாமதமாக வரும் :(.

2-3 நாளு டைம் கொடுங்க மக்கா, நீங்கலெல்லாம், நல்ல புள்ளைங்கள்ல...:)

குட்டீஸ், பெற்றோர் எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருக்கவும்;
இதற்காகக் கொதித்தெழுந்து போராட்டம் நடத்த வேண்டாம் என்றும்;
குறிப்பாக அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் :P (என்னது, அப்படி ஒரு ஐடியாவே இல்லையா?.....அதான்! இப்ப ஐடியாக் கொடுத்துட்டோம்ல :P)

அதுவரை, இதுவரை வந்த எல்லாக் கதைகளையும் மலரும் நினைவுகளாய்ப் பாருங்கள். அனைத்து கதைகளுக்குமான சுட்டி , இந்த வலைப்பூவின் வலது புறத்தில் உள்ளது.

நன்றி! நன்றி! நன்றி! :)

தொடர்ந்து வாங்க.

பி.கு.: இதுவரை, வந்த கதைகள்ல உங்களுக்கு ரொம்ப, ரொம்ப பிடிச்ச கதை எதுன்னு எல்லாரும், பின்னூட்டங்க பார்க்கலாம்.நன்றி.:)

Saturday, September 20, 2008

என் அம்மாவுக்காக...:) - வண்டு-சிண்டு கதை 5

வாங்க! வாங்க!

வணக்கம்.

அனைவரும் நலமா? :)

என் விடுமுறை இனிதே அமைந்தது :). விடுமுறையில் வந்த இரு கதைகளையும் நீங்களும் குழந்தைகளும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இன்றைய கதை.....'என் அம்மாவுக்காக...:)'

அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)

வண்டு-சிண்டு அறிமுகக்கதை

இன்றைய கதை.....'என் அம்மாவுக்காக...:)':

அகலப்பட்டை - 512 kb:



அகலப்பட்டை 150 kb:




-------------------------------------------------------------------------------------------------

என் பிள்ளை இன்னும் இதைக்கேட்கவில்லை.சுடச்சுட, சுட்டு, உங்களுக்கும், குழந்தைகளுக்கும் தந்துள்ளேன். :)

தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.

என் பிள்ளைக்கு இதைக்காட்டியவுடன் அவன் உரையாடலை இங்கே, பதிவேற்றுகிறேன்.

நன்றி. :)

சென்ற இரு கதைகளின் சுட்டி கீழே:

4. என் சிற்றுண்டி

3. விளையாடும் நேரமிது

பி.கு.:இந்தக் கதை, ஒரு வயதிலிருந்து ஏழு வயதுவரை உள்ள குழந்தைகளுக்காக என்பதால், இன்றைய கதையை, மிகக்குட்டி, வாண்டுகளுக்கு, பெரியவர்கள்தான், அவர்களுக்குப் புரியும் வகையில் மறுபடி சொல்ல வேண்டி இருக்கும் என நினைக்கிறேன் :). தங்கள் அனுபவத்தையும் எனக்குத் தெரிவியுங்கள்.

இன்றைய கதையில், இனிவரும் கதைகளின் போக்கில், மாற்றம் ஏதுவும் வேண்டுமெனில், பின்னூட்டமாய்ப் பின்னுங்களேன். நன்றி:)

Friday, September 5, 2008

வண்டு, சிண்டு - என் சிற்றுண்டி

வாங்க வாங்க.



எல்லாரும் எப்படி இருக்கீங்க? :))



இன்றைய கதை... 'என் சிற்றுண்டி'


அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:



அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:




===================================================================== கதை கேட்ட என் பிள்ளை: Mom! Can you tell me the story again in english?

ரங்கமணி : ரொம்பத் தமிழ்ல பேசீட்ட? Explain him



Volume mute செய்து, படத்தை ஓட்டி, மறுபடியும் ஆங்கிலத்தில் Story சொன்னேன் :)



பிள்ளை : yeah! I know, Cow gives us milk and...eggs comes from hen :)))) Mom! can you do an jungle adventure for me?



நான்: சரி! செய்கிறேன்



இப்ப மதுரையில் நான் எங்கு போய் Jungle தேடுவேன் :-0. UK திரும்பிப் போனால் அங்கே, இலையுதிர்க் காலம் ஆரம்பித்துவிடும்.ம்ம்ம்ம்....சொக்கா! நான் என்ன செய்வேன்.....



மக்கா! நான் என்ன செய்ய????? ==================================================================== :))).தங்கள் நண்பர்களே! தங்கள் கருத்துகளையும், குழந்தைகளின் கேள்விகளையும் எனக்குத் தெரிவியுங்கள்.



பி.கு.: தற்பொழுதும் விடுமுறையில் தான் உள்ளேன் :).

Sunday, August 24, 2008

சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'...3-ஆம் கதை

'சிண்டுவின் - விளையாடும் நேரமிது'

வாங்க வாங்க.

அனைவரும் நலமா? :)

பெரியவர்களும் குட்டீஸும் தயாரா!

வழக்கம் போல், புதிதாக வருபவர்களுக்காவும் நமக்காகவும், வண்டு-சிண்டு அறிமுகக் கதை, பேட்போமா?. யார் வண்டு, யார் சிண்டு-னு இன்னொரு முறை தெரிஞ்சுப்போமே :)))

அதற்கு இங்கே கிளிக்குங்கள்

இந்த வாரம் நாம் பார்க்கப்போவது .......

'சிண்டுவின் - விளையாடும் நேரமிது' ....பார்ப்போமா?

அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps :








அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps :









==================================================================
பிள்ளை: Mom! is that my badge? (அந்த பாட்ஜ் அவன் பள்ளியில் கொடுத்தது :) )
நான் : ஆமாம். உன்னுடையது தான்.

பிள்ளை: Why is vandu wearing it? who gave it to him? Did you give it?
நான் : ம்

பிள்ளை: Are those toys all mine? Did chindu really drive the train? Where is my dinasour now?
நான் : ......
====================================================================

ஆஹா! இந்த முறை, பிள்ளை, கதையை,சட்டை செய்யவே இல்லை :( . அவன் விளையாட்டுச் சாமான்களைத்தான் சிண்டு விளையாடியதா என்பதையேக் கேட்டுக் கொண்டிருந்தான்.

மக்கா! நல்லுள்ளங்களே! இந்த முறை கதை எப்படின்னு நீங்களாவது சொல்லுங்க. மூன்றாவது கதையிலேயே போர் அடுச்சுடுச்சா :-0.

வாங்க வாங்க.வந்து உண்மையச் சொல்லி என்னையக் காப்பாத்துங்க....:))

பெரியவர்களும் , குழந்தைகளும் தங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள். தற்போது நான் ஊரில் இல்லையென்றாலும், அப்போ அப்போ எட்டிப்பார்ப்பேன்.

ஆமா !சொல்லிப்போட்டேன். :)))

நன்றி! நன்றி! நன்றி!

பி.கு.: நந்து ஸார்! நிலாக் குட்டிக்கு, Happy sun-லேர்ந்து ஸ்டார் எடுத்து, உங்க நற்கரங்களால் நீங்களே கொடுத்துடுறீங்களா???? :))))). நன்றி. :)

பி.கு 2: நான் ஊரில் இல்லையென்றாலும், கதைகள் சொன்ன நேரத்திற்கு வரும் என்று நான் சொன்னதை, எங்கள் வீட்டு மின்சாரம் படிக்க மறந்துவிட்டது.அது தான் 4 மணி நேரத் தாமதத்திற்குக் காரணம். :((.

ஆனா, வந்துட்டோம்ல :)))

Thursday, August 14, 2008

PIT-க்குப் போகும் குட்டி ஆமை.. ...

PIT மெகாப் போட்டிக்கு....... - இந்த உரலைக் கிளிக்கிப் பெரிதாகப் பாருங்கள்.






















ஆமை வருது!
ஆமை வருது!
அசைந்து அசைந்து ஆடி வருது!

குட்டி இலையைத் தின்னும் ஆமை!
குட்டிக்கரணம் போடும் ஆமை!

விட்டுவிட்டு ஓடும் ஆமை!
(விடாமல்)
பிட்டு-க்கு மண் சுமக்கும் ஆமை! :)

Tuesday, August 12, 2008

கயலக்கா, புதுகை தென்றலின் கேள்விகளின் தொடர்ச்சி

இந்தப் பதிவு புதுகை தென்றல் கேட்ட முதல் கேள்வியின் தொடர்ச்சியாய்,

கயலக்கா கேட்ட இரண்டாவது கேள்வியின் பின்னூட்டம்.

===================================================================

ஓகே! நான் இன்னும் இந்த ஸ்டேஜ் வரல. என் மகன் இன்னும் குட்டிதான்.

ஆனால் இங்கே(நாங்கள் இருக்கும் இடத்தில்), முதல் பாகுபாடு வந்துவிட்டது. No pink, Only Blue :). இது, இங்கு உள்ள கலாச்சாரம். அதை மாற்ற முடியாது.குழந்தையிலிருந்து தாத்தா பாட்டிகள் வரை, கிண்டல் செய்வார்கள்.

அந்தந்த சமூகத்தில் இருக்கும் (பின்னூட்டங்கள் வந்த டில்லி,பங்களூர்,UK,புதுகை தென்றல் ஊர்) பழக்கங்களே இந்தப் பிரிவின் அடித்தளம்.

வயதின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டுதான் இருக்கும். சற்று, சிரமாக இருந்தாலும், இவை நடக்கும் போது, பெற்றோராகிய நாம் இதைக் கூலாகத்தான் ஹாண்டுல் செய்ய வேண்டும்.

நாமும் இது சிரீயஸ், இது இப்படி, அது அப்படி, இப்படி இருந்திருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமான தகவல் தராமல், தினமும் பள்ளியில் நடப்பவற்றைப் பற்றிப் பேசுவது போல் ஒரு cool tone-ல் ,

1.குழப்பாமல். அளவான தகவல் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம்.

2.தெரியவில்லை என்றால், ம்ம்ம்ம்...'தப்புத்தான்...ஆனா நடந்துடுச்சு, depends...lets see..' என்று தெரியாது என்றே சொல்லலாம்.

3.அல்லது, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு personality இருக்கும்.அந்தக் குழந்தையின் இயல்பு, ஒரு விளையாட்டுப் பொருள் கிடைக்கவில்லை என்றால் எப்படி சாமாளிப்பான்/ள், பிடிக்காத சாப்பாட்டை எப்படி சாப்பிடுவான்/ள், புரியாத ஒரு குழந்தைகள் படத்தைப் பார்த்துவிட்டு என்ன கண்ணோட்டம் கொடுப்பான்/ள் என்பது போல்.

அது தாய், தந்தைக்குத் தெரியும்.அதற்கு ஏற்றார் போல் தேவையான அளவு சொல்லிவிட்டு, மிச்சதை விட்டுவிடலாம். ரெண்டு நாளில் பிராஜக்ட் ஒர்க், ஸ்போர்ட்ஸ் டே என்று அவர்கள் priority மாறும்.

4.அல்லது, தாய்,தந்தைக்கு தன் குழந்தைக்கு எது சரி எனப்படுகிறதோ அது.

இதுதான் வழி என்று சொல்லவில்லை, இது புத்தகத்தில் இருப்பதும் இல்லை.எனக்குத் தோன்றியவை இவை. அவ்வளவு தான் :). Basically, explaining things depends on the kids personality and the parents.That much info. is enough.

// புதுகைத் தென்றல் said...
அதுவரைக்கும் ஏன் வெயிட்டணும்?அதுக்கு முன்னரே புரிய வைத்தால் தடுமாற மாட்டார்களே?//

புதுகைத் தென்றல்!

உங்கள் பிள்ளைகளின் வயது எனக்குத் தெரியவில்லை. (இங்கே, நீங்கள்,கயலக்கா,ராமலக்ஷ்மி,நான் எல்லாருமே, நம் குழந்தைகளின் வயதைப் பொருத்தும் கண்ணோட்டம் அளிக்கிறோம்)

அதனால், என் கண்ணோட்டம் வேறாக இருக்கலாம்.

//அதுக்கு முன்னரே புரிய வைத்தால் தடுமாற மாட்டார்களே?//

எததெற்கு முன்னரே, எதை, எதை என்று சொல்வீர்கள்.இந்த உலகத்தில் பிரச்சனைகளுக்காப் பஞ்சம்?. எல்லாவற்றையும் முன்னமே சொல்லிவிட முடியுமா?

இந்தப் ஆண்/பெண் பேதம் பற்றி மட்டும் முழுவதுமாக சொல்லித் தெளியலாம் என்று நினைத்தால், பிள்ளை எதிர் நோக்கும் மற்ற எல்லாவற்றையும் இதே முறையில் தெளியவைத்துக் கொண்டேதானே இருக்க வேண்டும். இதற்கு மட்டும் தான், நான் புரியவைப்பேன், மற்றவை என்னால் முடியாது, என்று நாம் ஒதுங்க முடியுமா?

எல்லாவற்றையும் முன்னமே, இது இப்படி, நீ இப்படி இருந்து கொள் எனறால், வளரும் பிள்ளை தானாய் உணரும், சிந்திக்கும் சுயத்தை இழந்துவிடமாட்டானா/ளா?

உலகத்தில் எல்லாம் pre-defined, அம்மா/அப்பா எழுதிய வழிகளில் சென்றால் வாழ்க்கை இனிமை என்பது சரியா?

ஒரு அளவிற்கு பொதுவாக அட்வைஸ் செய்துவிட்டு, அதிகமாக முன்னமே கொட்டிக் கவிழ்க்காமல் (ஓதாமல் - :P), தடுமாற நேர்கையில் தாங்கி நிறுத்த தயார் நிலையில் எப்போதும் நாம் இருக்கலாமே.

வாழ்க்கையில் பலப்பல, பிரச்சனைகளைப் பிள்ளைகள் சந்திக்காமலே போகலாம். அதற்கு முன் ஏன் குழப்பவேண்டும்?

ஸ்ஸ்ஸ்ஸ்...பதிவு பெருசாயுடுச்சு :))

----------------------------------------------------------------------------------------------

ம்ம்ம்...பதிவை இன்னும் பெருசாக்கப்போகிறேன் ஒரு கதை சேர்த்து. :)).

1. //எந்த வயதில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு வரையரை இருக்கிறது. அந்த அளவு மட்டும் சொல்ல வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் //

2. //சில விடயங்களை சொல்ல வேண்டிய வயதையும் நாமும் தீர்மானித்து விடுகிறோம் தானே?... அதனால் வந்ததாக இருக்கலாம்.. //

ம்ம்ம்...ஆமாம். தற்போது உள்ள சூழ்நிலையில் சில விடயங்கள் 3,4 வருடங்கள் முன்னதாகவே அறிமுகமாகின்றன.

அங்கே தான்

// புதுகைத் தென்றல் said... எந்த வயதில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு வரையரை இருக்கிறது. அந்த அளவு மட்டும் சொல்ல வேண்டும்//என்பது வருகிறது.

அந்த விடயத்தின் பார்வை, அந்தந்த வயதைப் பொருத்ததே. இதற்கு ஒரு கதை உண்டு, இந்தப் பதிவிலேயே சற்று நேரத்தில் சேர்க்கிறேன்.//

அதற்கான கதையே இது.

5-ஆம் வகுப்புப் படிக்கும் 10 /11 வயதுப் பெண்ணிற்கும் தாய்க்கும் நடக்கும் உரையாடல்:

பள்ளியில் இருந்து வரும் பெண்: அம்மா! செக்ஸ் என்றால் என்ன? What is Sex?
அம்மா: (முகம் பேயறைகிறது, தூக்கிவாரிப் போடுகிறது)...ம்ம்ம்ம்ம்...என்ன?

பெண்: செக்ஸ்-னா என்னமா?
அப்பா: ஏய், என்னடி கேக்குறா இவ?
அம்மா: இருங்க, உங்களுக்கு ஒன்னும் தெரியாது.நான் பேசுறேன்.

பெண்ணிடம் , அம்மா: அது வந்து...ம்ம்ம்....நீ ரூமுக்கு வா.சொல்றேன்

மிகவும் ஜாக்கிரதையாக 10 வயது பெண்ணிற்கு என்ன தெரியவேண்டுமோ புரியுமோ அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி , மிகவும் யோசித்து, சொல்கிறார், அளவாக.

20 நிமிடத்தில் ரூமை விட்டு பெண் வெளியே வருகிறாள்

அப்பா: என்ன ஆச்சு? புருஞ்சுதா?
பெண்: இல்லைப்பா. புரியலை. :(

ம்ம்ம்...அப்பா தன் வார்த்தை வட்டத்துக்குள், பெண்ணுக்குப் புரிய வைக்கிறார். இன்னும் 10 நிமிடம்

பெண்:ஆனா, அப்பா, நீயும் அம்மாவும் சொல்லும் இத்தனை விடயங்களையும் எப்படி, இத்துணூண்டு இடத்தில் எழுதுவது?

அப்பா: என்ன கேக்குற புரியல?

பெண்:பள்ளிக்கூடத்தில், ஒரு application form கொடுத்திருக்கிறார்கள். அதில் Name :

Age:

Sex: என்று கேட்கிறார்கள். இவ்வளவு சின்ன இடத்தில், நீங்களும் அம்மாவும் சொன்ன இத்தனை விடயங்களை எப்படி எழுதுவது? :((((

Sunday, August 10, 2008

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்

இனிய :) சுதந்திரதின நல்வாழ்த்துகள் :)))))


நிறையவற்றை ஒரு வாரம், மூன்று நாள் எனக்கொண்டாடுகிறோம். இனிய சுதந்திரதினத்தையும் அதில் சேர்க்கலாமே என்று தான், இப்போதுலிருந்தே.:)


இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!















படம்: கூகுளார்


இந்தப் பாட்டையும் கேட்டுருங்க! :)))
பாடல்:Smashhits.com


இந்தப் பதிவையும் படிச்சுருங்க :))).


நன்றி : நண்பர் அதிஷா

Friday, August 8, 2008

வண்டு - சிண்டு 'டைகரின் பிறந்தநாள்' - இரண்டாம் கதை

வாங்க வாங்க! நலமா? :)

குழந்தைகளுக்கான படக்கதைகளில் என்னுடைய இரண்டாம் முயற்சி.....

'டைகரின் பிறந்தநாள்'.

அதற்கு முன், வண்டு-சிண்டு அறிமுகப்பகுதியைப் புதிய குழந்தைகளுக்காகவும், உங்களுக்காவும் இன்னொருமுறை பார்ப்போமா? யாரு வண்டு, யாரு சிண்டு-னு இன்னோருவாட்டி தெரிஞ்சுப்போமே :)

வண்டு-சிண்டு அறிமுகம் இங்கே

இப்ப, 'டைகரின் பிறந்தநாள்'.

அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:





அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:




*************************************************************************************
கதை கேட்டதும் என் பிள்ளையுடனான உரையாடல்:

பிள்ளை: (very seriously) Mom! why is vandu crying? :(
நான் : வண்டுக்கு வயிறு வலிக்குது. அதான் அழறான்.

பிள்ளை: (thinking very deeply). But why is he crying? :(
நான் : நெறைய சாக்லேட் சாப்பிட்டதுனால வயிறு வலிக்குது.அதான் வண்டு அழுது.

பிள்ளை: (seriously) But why did he eat loads of them? :(
நான் : நிறைய சாக்லேட் சாப்பிடக் கூடாதுன்னு வண்டுக்குத் தெரியல அதான்.

பிள்ளை: But why didn't, tiger and chindu tell him, not to eat loads of choclates?
நான் : ம்ம்ம்....சிண்டும், டைகரும் அப்போ அங்க இல்ல. எல்லாரும் வேற ரூம்ல இருந்தாங்க. அதனால யாரும் வண்டு சாக்லேட் சாப்பிடறதப் பாக்கல..

பிள்ளை: (more seriuosly) Oh mom! but, why is vandu crying and why did he eat so much choclates?
நான் : ............................................

*************************************************************************************

கதை கேட்டதும் உங்கள் கருத்துகளுடன், உங்களுடன் கதை கேட்ட குழந்தைகளின் கேள்விகளையும், கருத்துகளையும் சேர்த்து பின்னூட்டமிட்டால், மேலும் மகிழ்வேன்.

தொடர்ந்து கதை கேட்க வாங்க. இதே கதையையும் , முந்தையக் கதைகளையும் அடுத்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை, மீண்டும் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும், குழந்தைகள் கேட்கும்வரை, இங்கே வந்து, அவர்களுக்கும் காட்டுங்கள்.

ஒரு புதிய கதையுடன் ஆகஸ்ட் 23, 2008-ல் உங்களை, சந்திக்கிறேன். மகிழ்ச்சி. :)

பி.கு.: ஒரு மூன்றரை வாரத்துக்கு புதுவண்டு வீட்டவிட்டு எஸ்கேப் ஆகப்போகுது. ஆனா, வண்டு சிண்டு கதை கண்டிப்பா சொன்ன நேரத்துக்கு வரும் :).


பின்னூட்டம் பார்க்கவும் அப்போ அப்போ புதுவண்டு பறந்து வரும். அதுவரைக்கும் எல்லாரும் உங்க வலைப்பூவோட என் வலைப்பூவையும் சேர்த்து பத்திரமாப் பாத்துக்குங்க. ஆமா! சொல்லிட்டேன் :P :)))).

முதல் கதை: இது என்ன கலாட்டா?

Friday, July 25, 2008

வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா?' : முதல் கதை :)

வண்டு - சிண்டுவின் முதல்க் கதை :-).

வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா?'

அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:



அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:



-------------------------------------------------------------------------------------------------
இதைப் பார்த்தவுடன் என் பிள்ளையின் கேள்விகள்:

பிள்ளை: Mom! Can i see it again?
நான் : சரி. பாரு.

பார்த்தபின்

பிள்ளை: Mom! I always tidy up. Am i a good boy?
நான் : ஆமா. டைடியப் பண்ணின நீ குட் பாய் தான்.

பிள்ளை: Did you clean up the kitchen?
நான் : Nope. I forgot.

பிள்ளை: If you tidy up, i will say u r a good girl. Can u do it now?
நான் : :-) சரி! இப்பவே செய்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------

தங்கள் கருத்துகளையும் தங்கள் குழந்தைகளின் கருத்துகள், கேள்விகளையும் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன். அடுத்த கதை இரண்டு வாரம் கழித்து, ஆகஸ்ட் 9-ஆம் தேதி. ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஒரு புதிய கதை.

அதுவரை, இந்தக் கதையைக் குழந்தைகள், எத்தனை முறை வேண்டுமானாலும், இங்கே வந்து வந்து பார்க்கலாம்.

நன்றி.

நான் வேலைக்குப் போகலாமா?????

அண்மையில் படித்த இரண்டு பதிவுகளின் பாதிப்பே இந்தப் பதிவு.

ஒன்று இந்த வார நட்சத்திரப் பதிவர், சந்தனமுல்லை அவர்களின் ‘நாங்களும் இந்திராநூயிக்களும்’.இன்னொன்று நானானி அம்மாவின் ‘அப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள் காரில்'.

இருவேறுபட்ட இடங்களில் நடக்கும் இருவேறு சம்பவங்கள். ஒன்று (சந்தனமுல்லை), குழந்தைகளுக்காக அன்பைப் பொழியும், தன் நேரத்தை வேலைக்கும் வீட்டிற்கும் (சில நேரங்களில் தன் சக்தியையும் மீறிப்) பங்கிடும் பெற்றோரின் பதிவு. இது உண்மைச் சம்பவம் என்பதுற்குச் சான்று தேவையில்லை.

இன்னொன்று குமுதம் இதழில் வெளிவந்து உண்மையில் சென்னையில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம்.நான் ஒரு குழந்தைக்குத் தாய், என்னும் வகையிலும் என் மனதைக் கலங்கடிக்கும் விஷயம். ஆனால் இது எவ்வளுவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. (இதன் தொடர்பான பின் குறிப்பைப் பதிவின் கடைசியில் படிக்கவும்).

இது நானானி அம்மாவின் பதிவைப் பற்றியது அல்ல. அவர்கள் நெஞ்சம் பதைபதைத்து, சற்றுக் கவனமாய் இருங்கள் என்ற பாசத்தில் எழுதிய பதிவே என்பது, அவரின் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவரும் எனக்குத் தெளிவாய்த் தெரிகிறது. நான் குமுதம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எனவே இந்தக் கட்டுரை, நானானி அம்மாவின் பதிவின் வாயிலாய் என் கண்ணில் பட்டது. அவ்வளவு தொடர்பே என்னுடைய இந்தப் பதிவிற்கும் அவர்களின் பதிவிற்கும் என்று சொல்லிவிட்டு, மேலே தொடர்கிறேன்.

இப்பொழுது குமுதத்தின் கட்டுரைக்கு வருவோம் (நான் இன்னும் இந்தக் கட்டுரையை நேரடியாய்ப் படிக்கவில்லை.). (இதன் தொடர்பான பின் குறிப்பைப் பதிவின் கடைசியில் படிக்கவும்).

இந்தக் கட்டுரை(உண்மையாய் இருக்கும் பட்சத்தில்) எதைப்பற்றியது? வேலை மும்முரத்தில் குழந்தையைக் கவனிக்கத் தவறிய ஒருவரின் பொறுப்பற்றத் தன்மையைச் சொல்வதா?

பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளையை, வேலைப் பளுவிற்குப் பறிகொடுத்த சம்பவம் ஒன்று நடந்திருக்கின்றது, மக்களே சற்றுக் கவனியுங்கள் என்று இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து மக்களை நிதர்சனத்திற்குக் கொண்டு வரும் ஒன்றா?

சாஃப்ட்டுவேர் வேலையில் இருக்கும் பெற்றோரே! இது உங்களால்த் தான் நடக்கிறது, நீங்கள் பிடுங்கும் ஆணிகளிலாலேயே உங்களை அறைந்து கொள்ளுங்கள் என்று சொல்வதா?

எந்தப் பத்திரைக்கையிலும் வராத ஒன்று, எப்படிக் குமுதத்திற்கு மட்டும் தெரிந்தது?. நானானி அம்மாவின் பதிவில் ஒரு அனானியும் இதையேக் கேட்டு இருக்கின்றார். (சிகாகோ சம்பவம் எல்லாச் செய்தித்தொடர்பு சாதனங்களிலும் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.)

முதல் கேள்வி: இது ‘சென்னையில் நடந்தது’ என்று பரபரப்பிற்காக எழுதப் பட்ட ஒரு கட்டுரையா? ( (இதன் தொடர்பான பின் குறிப்பைப் பதிவின் கடைசியில் படிக்கவும்).

இரண்டாவது கேள்வி: ஒரு பெண் வேலைக்குச் செல்வதால், குழந்தைதகள் கவனிக்கப்பட்டாமல், அரவணைப்பில்லாமல் அவதிப்படுகிறார்கள் என்ற நிலை வரும் எனில், இதற்கு வழிதான் என்ன?

1. பெண்ணைப் பொறுப்பற்றவள் என்று குற்றம் சொல்லலாம்.

2. பெண்கள் வேலைகுச் செல்லவில்லை என்று யார் அழுதார்கள் என்று கேட்டு, அவர்களை வீட்டில் இருக்கச் சொல்லலாம்.

3. பெண்ணை(தாயை)த் தவிர , பிள்ளைகளைக் குடும்பத்தில் வேறு யாராலும் பார்த்துக்கொள்ள இயலாது, அவள் தெய்வம் என்று சென்டிமெண்டாய் அடித்து, மேலே உள்ள இரண்டாவது பாயிண்டை, கடைசியில் உண்மை ஆக்கலாம்.

4. வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்குத் துணையாய், மற்ற குடும்ப உறுப்பினர்களும், க்ரீச், பேபி சிட்டர் போன்ற அமைப்புகளும் ஒரு வழியாய் இருக்கலாம்.

5. தாய் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனும் சூழ்நிலையில், சில வருடங்கள் அவள் வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளட்டும், குழந்தை வளர்ந்த பின் (3-5 வயது வரை), அவள் வேலைக்குச் செல்ல விரும்பினால், அதற்கானச் சூழ்நிலைகளிலும், ஊக்குவிப்புகளிலும் ஏற்பாடுகளிலும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் பெரும் துணையாய் நிற்கலாம்.

6. ________________________________________ - இது உங்கள் கருத்து. நடைமுறைக்கு ஒத்துவருவதாய், நீங்கள் நடைமுறையில் வெற்றிகண்ட ஒன்றாய், அல்லது உங்கள் மனதில் நியாயம் எனப்படுவதாய் உள்ள கருத்துகள்.

மூன்றாவது கேள்வி: சாஃப்ட்டுவேர் மக்களின் மேல் அப்படி என்ன காண்டு? பெரும்பாலான எதிர்மறைச் சம்பவங்கள், சில காலங்களாக அவர்கள் தலையில் விழுவது ஏன்?(உதாரணம் தரவில்லை. சாஃப்ட்வேர்காரர்கள் என்று வந்து, நீங்கள் படித்த செய்திகளை நினைத்துக் கொள்ளுங்கள்) அவர்கள் மென்பொருளாளர்கள் என்பதினால் இச்சம்பவம் நடக்கின்றதா? அல்லது அவர்கள் வேறு வேலை பார்த்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காதா?

சாஃப்ட்வேர் எனப்படும் தொழிலில் பல பிரிவுகள் உள்ளனவே:

1. மென்பொருளாளர்கள்
2. ஹார்டுவேர் இஞ்னியர்ஸ் (தமிழ்ப் பதம் தெரியவில்லை.சொன்னால் கற்றுக் கொள்வேன் நன்றி :-) )
3. நெட்வோர்க் எஞ்னியர்ஸ்
4. மேனேஜர்ஸ்
5. குவாலிட்டி கண்ட்ரோல்
6. எச். ஆர்.
7. மார்க்கட்டிங் இஞ்னியர்ஸ்

என்று இன்னும் பல பிரிவுகள். 'சாஃப்டுவேர் ஆளுகள்' என்று சொல்லும் போது இந்தப் பிரிவுகளில் யார் குறிவைக்கப்படுகிறார்கள்? (இதில் ஆணிபிடுங்குவது என்பது பெரும்பாலும் முதல் பிரிவின் கீழ் வரும்). இவர்கள் எல்லாருமா அல்லது ஒரு பிரிவினர் மட்டுமா?

ஒரு பிரிவினர் மட்டும் என்றால் , சம்பவத்திற்குக் காரணம் அவர்கள் செய்யும் தொழிலா?

அவர்கள் இந்த சாஃப்ட்வேர் வேலை பார்க்காமல்,(சமூகத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக அறியப்பட்ட) பத்திரிக்கையாளராகவோ, பிசினஸ் மாக்னெட்டாகவோ, சினிமாத்துறை வல்லுனர்களாகவோ, டாக்டராகவோ, விண்வெளியாராகவோ அல்லது இன்னும் (பல),வீட்டை விட, வேலைக்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டிய வேலையில் இருந்திருந்தால், அவர்களின் மேல் உள்ள இந்தக் கோபம் குறைந்திருக்குமா? அதாவது, இந்தக் கோபங்கள் தொழில் சார்ந்தவையா?

பி.கு.: வெகு நாட்களாக படித்த பல செய்திகளின் தாக்கமே இந்தப் பதிவு. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கேள்விகளாய்ப் பட்டால், அப்படி இருக்க வேண்டும் என்று இதை எழுதவில்லை.

மூன்று கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன? கேட்டாயிற்று. தனித் தனியாயும் எடுத்துக் கொள்ளலாம்.

நன்றி.

பி.கு.: தேதி: 27 ஜூலை 2008 :-
குமுதம் பத்திரிக்கையில் வந்தக் கட்டுரையை நான் நேரடியாகப் படிக்கவில்லை. குழந்தைகளுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று வந்ததாக நான் புரிந்து கொண்டது, ஒரு தவறு. அப்படி எதுவும் குமுதத்தில் வரவில்லை, பிள்ளைகள் செக்யூரிட்டியின் பாதுகாப்பில் 'விளையாடித்தான்' கொண்டிருந்தார்கள் என்று தான் வந்திருக்கின்றது; குழந்தைகள் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று பின்னூட்டதில் எனக்குத் தெளிவுபடுத்தப் பட்டுவிட்டது. என்வே என் முதல் கேள்வி செல்லாதது ஆகிவிட்டது. என் தவறுகளிலேயே மகிழ்ச்சியான தவறு இது. குழந்தைகள் நலமே :).

Sunday, July 20, 2008

வாங்க! வாங்க! வண்டு - சிண்டு ட்ரெய்லர் பார்க்க வாங்க :)

எல்லாருக்கும் வணக்கம்! :)

வருகை தந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி.

இது என்னுடைய சிறிய முதல் முயற்சி. என்னுடைய 4 1/2 வயது மகனுக்காக, சொல்ல நினைத்துத் துவங்கியது, இப்பொழுது உங்கள் முன்னால்.

அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps :



அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:



இரண்டு வாரத்திற்கு ஒரு கதை என்று, இப்பொழுது நீங்கள் பார்க்கும் இந்த வடிவிலேயே கதை சொல்லப்படும்.

தமிழில் கதை இருக்க வேண்டும், குழந்தைகள் தமிழில் 'டிஜிடல் ஸ்டோரி' கேட்க வேண்டும் என்பதன் முயற்சியே இது.

1-லிருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான, கதைக்கரு சொல்லப்படும். ஆர்வமுள்ள, வண்டு-சிண்டுவைப் பிடித்த மற்ற குழந்தைகளும், குழந்தயுள்ளம் கொண்ட எல்லாப் பெரியவர்களும், வந்து கேட்டால், மிக்க மகிழ்ச்சியாய் இருக்கும்.

தங்களின், ஊக்குவிப்பை, பின்னூட்டமாய் இட்டுச் செல்ல வேண்டுகிறேன்.

நிறை, குறை, பிடித்தவை, மிகவும் பிடித்தவை, சற்றுக் குறைவாய்ப் பிடித்தவை :) மற்றும் உங்கள் எண்ணங்கள் என்னவோ அதையும், இந்தப் படக்கதை கேட்ட உங்கள் குழந்தைகளின் கேள்விகள் என்னவோ அதையும் எனக்குத் தெரிவியுங்கள். :).

குழந்தைகளும் நீங்களும் எப்பொழுது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து இந்த வலைப்பூவில் கதை கேட்கலாம். :-)

நன்றி!

-இப்படிக்கு,
புதுவண்டு.

பி.கு.: என் மின்னஞ்சல் : pudhuVandu@gmail.com.

எல்லாக் கதைகளையும், இந்த வலைப்பூவின் வலதுபுறத்தில் உள்ள உரல்களின் மூலம் பார்க்கலாம்.

Monday, July 14, 2008

ஜூலை - PIT – PIT, நந்து மற்றும் ராமலட்சுமிக்காக... :)














ஒரு பனிக்கால இரவில்...

நீ ஊரில் இல்லாமல்
வாழ்க்கை ஒன்றும் நின்று விடவில்லை!

அலுவலகமும் நானும் கடமையாய்
இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றோம்!

நண்பர்களும் நானும் நட்பாய்
அளவளாவிக் கொண்டே தான் இருக்கின்றோம்!

இரயில்த்தோழிகளும் நானும் ‘நலமா?’
விசாரித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!

பிள்ளையும் நானும் ருசியாய்
சமைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!

நானும் நானும் அன்பாய்
சுவாசித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!

நானும் நானும் காதலாய்
வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றோம்!

ஒரு பனிக்கால இரவில்
பேருந்து நிலையத்தில் உன் முகம் பார்க்கும் வரை!
என் மூச்சுக்குழல்களின் சிரமங்கள் சீரான வரை!
என் கண்களின் காட்சிகளில் நீ நிறையும் வரை!
என் தூக்கத்தின் நிம்மதியாய் நீ வந்த வரை!
நானும் நானுமாய் என்னை உணர்ந்த வரை!

நீ ஊருக்கு வந்தபின் தான்
வாழ்க்கை, மேற்கொண்டு நகரத் தொடங்குகிறது.

------------------------------------------------------------------------------------------------
சரி! படம் முடிந்தபின், படத்தின் பெயரைத் தொடர்புப்படுத்தி ஒரு வசனம் சொல்லி, வணக்கம் சொல்லவது, (நான் மேலே காட்டியிருக்கும்) ‘ஒரு நல்ல’ படத்திற்கு அழகு. :-O.

நந்து, நந்துன்னு ஒரு நல்லவர் இருக்கார். ‘நிலா’-வ ரொம்ப நல்லாப் படம் பிடிப்பார். அவரோட இந்தப் பதிவுல

http://nandhu1.blogspot.com/2008/07/july-photo-condest-night-light-pit.html

பின்னூட்டம் படிச்சீங்கன்னா, அதுதான், படத்தின் பெயரை தொடர்புப் படுத்தும் வசனம்.முடிஞ்சாப் படிச்சுட்டு வாங்க.:-)

இப்படியெல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணமாப் போச்சு.என்னமோ, டீச்சர் சொல்ற மாதிரி, ஒரு ‘இருத்தலின் அடையாளமாய்’ இந்த மாதமும் PIT- காரவுகளை இம்சிக்கத் தயாராயிட்டேன் :)

படம் சில நாட்களுக்கு முன்பு எடுத்தது.புதிதாய் முயற்சித்தது, எதுவும் தோதாய் அமையவில்லை. அதனால், படம் பழசு, கவிதை புதுசு. :)

உசுப்பேற்றிய நந்துவுக்கும், ராமலட்சுமிக்கும் , தனி மடலில் அக்கறையாய், ‘இன்னும் இரண்டு நாள் இருக்கு’ என்று உற்சாகப்படுத்திய ராமலட்சுமிக்கும் (அவங்களே தாங்க இவங்களும்) என் வெரி டச்சி டாங்ஸூ! டாங்ஸூ! டாங்ஸூ!

வணக்கம்.

டிஸ்கி.:இந்தக் கவிதையாலும் படத்தாலும் யாருக்கும் யாதேனும் (எதிர்மறையான) பாதிப்பு ஏற்பட்டால், ‘ந’ , ‘ர’ என்ற இரு நல்லவர்கள், முழுப்பொறுப்பையும் ஏற்பார்கள். :D :D.

Monday, June 23, 2008

நான் இப்பத் தான், வெள்ளை மயில் பார்த்தேன்














நான் பார்த்த வெள்ளை மயில் இது தான்.:D :D.படம் மேல் அழுத்திப் பெரிதாகப் பாருங்க!.நல்லாத் தான் இருந்தது.

சென்ற சனிக்கிழமை, வீட்டிலிருந்து, 1 மணி நேரக் கார் பயணத்தில், இருக்கும் 'Leeds Castle' என்ற காசிலுக்குச் சென்றோம்.சின்னக் கோட்டை தான், நண்பர்களுடன் ஒரு நாள் சுற்றி வருவதற்கு ஏற்ற இடம். காசிலைப் பார்த்ததை விட நன்றாக அரட்டைக் கச்சேரி நடந்தது. குழந்தைகள், நம்மைக் கண்டுகொள்ளாமல், நண்பர்களுடன் விளையாடும் பாக்கியம் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்கள் இவை.:)

இங்கு நிறைய மயில்கள் இருந்தன.கூடவே ஒரே ஒரு வெள்ளை மயிலும். காற்றிலும் குளிருலும் இந்தத் தோகை எப்படி, எப்பவுமே உஜாலாவிலேயே இருக்கிறது. இருந்தாலும் ரொம்ப உஜாலா......

மற்ற மயில்கள் எல்லாம் வண்ணமயமாகவே இருந்தன.மயிலின் கழுத்து, வீட்டில் வாங்கிய மயில் கழுத்துக்கலர், புடவை கலரிலேயே இருந்தது!!!!!!! :-0

அப்புறம், அப்படியே நடந்து நடந்து, ராணியின் படுக்கை அறைக்குக்குள் போயிட்டோம்.அங்கு ராணி இல்லை, ஆனால் ஒரு கைடு இருந்தார்.என்ன ஏது என்று கேட்காமல் படம் அடுத்துக் கொண்டு வந்து விட்டோம்.














வேணும்னா,(படம் மேல் அழுத்தி) இதையும் பெரிதாகப் பாருங்கள்,ராணி தான் இல்லையே!

பிறகு, Queens bathroom, Yellow drawing room என்று சின்னச் சின்ன அறைகள்.1278, கட்டப் பட்டது என்றாலும், இப்பொழுது நாம் பார்த்தது, பல கைகள் மாறி, 19-ஆன்,20-ஆம் நூற்றாண்டின் ஆர்க்கிடெக்சரில் இருக்கும் கோட்டை தான்.அதனால், எல்லாமே கொஞ்சம் மாடர்ன்னாகத் தான் தெரிகிறது.

டாராயிங்க் ரூமை விட்டு வெளியே வரும் பாதையில், ஒரு ரோஜாச் செடி.என்னவோ, வித்தியாசமாய் இருக்கே என்று பார்த்தால்.எல்லா ரோஜாக்களும் வானவில் வண்ணத்தில் இருந்தன.ஒரே ரோஜா மல்டி கலரில்.சரி, செயற்கைப் பூக்கள் என்று நினைத்தால், இல்லையாம்.இயற்கைப் பூக்கள் தானாம்.வேரில் 'டை', சாயம் ஊற்றி வண்ணங்கள் கொண்டு வருகிறார்களாம்.
















கத்தரிப்பூ நிறத்திலும் ஒரு ரோஜாச் செடி இருந்தது.

இன்னும் கொஞ்சம் நடந்து போனால் வெளியே வந்து விட்டோம்!!!! சரி, என்று சாப்பாட்டு வேலையை முடித்து விட்டு, 'Bird Show', நடக்கும் இடத்திற்குச் சென்றோம். 25 நிமிடங்கள் , ஒரே ஒரு நிகழ்ச்சியாளர், மூன்று பறவைகள். பறவைகளின், பிறப்பிடம், உணவு முறை, வாழ்க்கை முறை, பறக்கும் முறை எல்லாம் குழந்தைகளுக்குப் புரியும் படி சொல்கிறார்கள்.

மேலே இருகும் விடியோ, உலகின் மிக வேகமாக ஓடக் கூடியப் பறவையாம்.அதனால் அதை ஓட விடாமல், அது 6 அடி முதல் 10 அடி வரை எம்பிக் குதிக்கும் என்பதைக் காண்பித்தார்கள்.இதில் என்ன இருக்கு என்று, யோசித்தேன். இந்தப் பறவை பறக்காதாம்.நடக்கும், ஓடும், எம்புமாம்.அப்பச் சரி 10 அடி இஸ் வெரி குட்.

ஜோராக கை தட்டி விட்டு அங்கிருந்தி கிளம்பி, ஆளில்லாத ஒரு புல் வெளியில்................எல்லாரும் games விளையாடி விட்டு வீட்டுக் கிளம்பினோம்.

பின்ன 25 பேர் சத்தம் போடாமல் விளையாட முடியுமா?.அதான் யாருக்கும் தொந்திரவு இல்லாமல் ஒதுங்கியாகிவிட்டது.:))

அப்புறமா நிறைய ஸ்னாக்ஸ் சாப்பிட்டு விட்டு, அங்கிருந்து எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......:)).

Wednesday, June 18, 2008

ஜி! – ன்னா ஜிலேபி! ‘சி’-ன்னா சிவாஜி!....ஒண்ணு நானானி அம்மாவுக்கு, ஒண்ணு செல்வி அம்மாவுக்கு!

எழுத்தாளர் சுஜாதாவின் ‘ஜே.கே.’ என்ற நாவலில், ஒரு வரி வரும். ஜியோ என்ற ஜியோத்ஸனா என்ற கதாநாயகியைப் பற்றித் தான் :-).

‘கிடாரின் ‘ஜி’ கம்பியைத் தட்டிப் பாருங்கள் ஜியோ;
திராட்சைத் தோட்டத்தில், கொத்துக் கொத்தாய்த் தொங்கும் திராட்சைகளில், ஒரே ஒரு திராட்சையின் நுனியில் இருக்கும் பனித்துளியை நாவால் தொட்டுப் பாருங்கள் ஜியோ;’

நிற்க! இந்த ‘ஜி’ ஜிலேபியைப் பற்றித் தான் இருக்க வேண்டும் என்பது நானானி மற்றும் செல்வி அம்மாவின் அன்புக் கட்டளை.அதனால் ‘ஜி’யோவுக்குத் தடை :(

‘சி’ல்லென்று ஒரு காதல்... ... படம் நல்லா இருந்தது... ...சூர்யா சூப்பர்... ...சரி சரி! ‘ஜோ’வும் ‘பூ’வும் கூட ஓக்கே.அதிலும் மச்சக்காரி பாடலில் ‘பூ’... ...

நிற்க! இந்த ‘சி’ சிவாஜியைப் பற்றித் தான் இருக்க வேண்டும் என்பது செல்வி மற்றும் நானானி அம்மாவின் அன்புக் கட்டளை.அதனால் ‘பூ’க்குத் தடை :(

‘ஜி’வாஜி வாயிலே ஜிலேபி என்று ஒரு முன்மாதிரியான பின்நவீனத்துவத்தை முன் வைத்த நிஜமா நல்லவரின் பதிவில் தான் முதல் முறையாக, இந்த, சரித்திரப் புகழ் பெற்ற;சுனாமியை சுழற்றி அடித்த; வளைகுடாவை வளைத்துப் போட்ட; இமயமலையை இளக வைத்த ‘ஜி-வா-ஜி’ தொடரைப் பார்த்தேன்.படுச்சுட்டு ,அவர் பதிவில் பின்னுட்டம் போடாமல், விட்டு விட்டு, இப்ப உன் பதிவில் அதைப் பற்றிச் சொன்னால், நி.ந. பெருந்தன்மையாய் விட்டு விடுவார் என்று நினைப்பா என்று யார் யாரோ கேட்பது போல் இருப்பதால்... ...

நிற்க! இந்த ‘சி’ யும், ‘ஜி’யும் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’யைப் பற்றித் தான் இருக்க வேண்டும் என்பது நானானி மற்றும் செல்வி அம்மாவின் அன்புக் கட்டளை.அதனால்... ...:(

இதுல பாருங்க, வல்லியம்மா சுத்துன ஜிலேபில தான், ‘புகைப்படம்’ சூப்பர். (அதாவது! ஜாங்கிரி... ...தென்னகத்துல நமக்கு இரண்டும் ஒண்ணுதாங்க!ஹி..ஹி..ஹி..)

பார்த்த உடனே கை நீட்டி, ஒண்ணு எடுத்து, சின்னதா விண்டு, ஜூசியா வாயில போட்டு, கண் மூடி ரசிச்சு, இனிப்ப நாக்குல சுவைச்சு, தொண்டைல எறங்க விட்டு, ஒரு பெருமூச்சு விட்டுக் கண் தொறக்கணும்... ...(எதுக்குப் பெறுமூச்சா? அப்புறம் எடை பார்க்கும் இயந்திரமும் ‘பெறு மூச்சிற்கு ‘ரிப்பீட்டு’ப் போடுமே)... ...:-0

இத ஒரு, கவிதையா எழுதுவோமா?

வல்லியம்மா சுத்துன ஜாங்கிரி!
பார்த்த உடனே கை நீட்டி!
எடுத்து ஒண்ணு கண்மூடி!
சின்னதா விண்டு வாயில் போட்டு!
ஜூசியா இருக்கே எனஉணர்ந்து!
ரசித்து ரசித்து ‘உச்’ கொட்டி!
தொண்டையில் இறக்கி களித்திடவே!
சுத்துவோம் நாமே ஜிலேபியே!

இது எப்படி இருக்கு? என்னது கேவலமா இருக்கா! நோ!நோ! செல்லம்! நீ அப்படி எல்லாம் சொல்லக் கூடாது செல்லம்.சிவாஜி கண்ணக் குதிடுவாரு. எந்த சிவாஜி? மராட்டிய மன்னரா? நடிகர் திலகமாவா? யாரா இருந்தா நமக்கென்ன செல்லம்? கண்ணு நம்மளது! அதக் காப்பாத்திக்கணுமே? :-0

சரி! ‘ஜி’ பத்தி ஒரு கவிதை எழுதியாச்சு,அதனால ‘சி’ பத்தி ஒரு சில கேள்வி பதில் சொல்லுவோமா?

கேள்வி 1:16 வயதில் புதுவண்டு என்ன செய்தது?
வேற என்ன பிறந்த நாள் தான் கொண்டாடுச்சு :D

செய்தி:நம்ம மராட்டிய மன்னர், 16 வயதில் ஒரு படையை நடத்தி, பிஜப்பூரின், டோர்னோ கோட்டையைப் பிடித்தாராம்.அதுதான் அவர் முதல் போர்.

கேள்வி 2: 36 வயதில் நீங்கள் என்ன செய்தீர்கள்?
(நமக்கு இன்னும் அவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓ வயசு ஆகலீங்க :D)

செய்தி:1666, அவுரங்கசீப், சிவாஜியையும் அவர் 6 வயது மகன் சம்பாஜியையும், டெல்லியில் வீட்டுக் காவலில் (பிடித்து) வைத்து விட்டார். சிவாஜி தனக்கு உடல் நலமில்லை என்று (பொய்) சொல்லி, கடவுளுக்கு இனிப்புகள் நெய்வேத்தியம் செய்ய வேண்டும் என்று சொல்லி தினமும் கோவிலுக்கு இனிப்புகள் வழங்கச் செய்தாராம்.

பல நாள் இப்படிச் செய்து, ஒரு நாள் அந்தப் பெட்டிகளில், ஒவ்வொன்றிலும் இவரும் இவர் மகனும் ஒளிந்து கொண்டு, தப்பி விட்டனராம். இதில், உள்குத்து நிறைய இருக்கலாம் என்று வரலாறு சந்தேகித்துக் கொண்டே இருக்கிறது.

நிற்க! பதிவு ரொம்பப் பெருசாகுது.டா... டா...பை...பை...

பி.கு.: சிவாஜி பற்றிய செய்திகள் உபயம் கூகுள் ஆண்டவர். என்னையும் மதித்து, ‘சி-வா-ஜி’-க்கு அழைத்த நானானி அம்மாவிற்கும், செல்வி அம்மாவிற்கும் இரண்டு இரண்டு ஜிலேபி. பின்னூட்டம் போடுவோருக்கும் இரண்டு உண்டு.

:D :-) ;)

Sunday, June 8, 2008

ஜூன் PIT-க்கு

PIT ஜூன் மாதப் போட்டிக்காக முதல் படம்.

என் பிள்ளையின் வகுப்பாசிரியையும் உதவித்தலைமை ஆசிரியையும்.ஆசிரியைகளுக்கோ வேலையில் மும்முரம்.ஆனால் கீழே இருக்கும் இரண்டு வாண்டுகளுக்கோ? :)














லண்டன் மெட்ரோபாலிடன் காவலர்.No stopping at anytime :( என்று சொல்லி நாள் முழுவதும் அவருக்கு அங்கு தான் ஸ்டாப்பிங்.

















இவர்களும் லண்டன் மெட்ரோபாலிடன் காவலர்களே.வண்டி, வாண்டுகள் படத்தைத் தாண்டி இன்னும் நிறைய மக்கள் எல்லாரையும் கண்காணிக்க வேண்டும்.........














இவர்கள் வேலைக் கடினமா? அல்லது 10, 20 வாண்டுகளைச் சமாளிக்கும் ஆசிரியைகளின் வேலை கடினமா?

பி.கு.:அப்பாடா.......ரொம்ப நாள் கழிச்சு, ஒரு பதிவு போட்டாச்சு. :D :D.

வலையுலக நல்லுள்ளங்களே!
வாங்க!
வந்து கருத்தைச் சொல்லுங்க!
போட்டிப் படம் இந்த மாதத் தலைப்பிற்கு ஓகேவா????????

Tuesday, May 13, 2008

PIT - மே மாதப் போட்டிக்கு, என்னோட 'ஜோடி'

ஏய்.ஓடிப்போலாமா?

ம்.சரி.மழை பேஞ்சு , கிளைமேட் சூப்பரா இருக்கு.ஆனா,எப்புடி?

ஒரு ஐடியா.அந்தக் கார்?

லைசென்ஸ் இருக்கா?

இந்தப் புதுவண்டு PIT-க்குப் படம் எடுக்குறேன்னு, நம்மள வீட்டுக்குள்ள வச்சுட்டு, என் லைசென்ஸக் கூட ஒளிச்சு வச்சுருச்சு.

இரு இரு. நம்ம சக வலைப்பதிவர்கள் கிட்டக் கேப்போம். அவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.நல்லதா ஒரு வழி சொல்லுவாங்க.ஓகேவா?

ஓகே.

ஆமா எங்க போறோம்?

வேற எங்க,நம்ம PIT-க்குத் தான்.ஓகேவா?

டபுள் ஓகே.:)

-------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள முதல் படம் PIT போட்டிக்கு.கீழே வரும் மற்றவை பார்வைக்கு.








படங்கள் எப்புடின்னு சொல்லுங்க மக்களே.தேறுமா?.போட்டிப் படம் ஓகேவா?

Friday, May 2, 2008

டாக்டர் புதுவண்டின் பரிந்துரை - வ.வா.ச. போட்டிக்கு :)


படத்தின் மேல் கிளிக் செய்து, பெரிதாகப் பார்த்தாலும், மாத்திரை சாப்பிடத்தான் வேண்டும்.

வாங்க! வாங்க! வந்திருக்கவுங்க, இதையும் சொல்லிட்டுப் போங்க.

போட்டிக்கு 'இரண்டாவது' பதிவா இந்தப் படம் கொடுக்கவா இல்ல இந்த மொக்கை மாதிரியக் கொடுக்கவா?

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு சீக்கிரம் சொல்லுங்களேன்.
நன்றி.:-))).

அப்புறம்,முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும்.மேல இருக்குற படம், நான் சொந்தமா, என் சொந்தக் காமிராவுல, சொந்த மாத்திரைகளை சொந்த மேஜையில்,ட்ரேயில் வைத்து சொந்தமாக எடுத்தது.கமெண்டும் என்னுடையதே. :D

பி.கு.:போட்டிக்கான முதல் பதிவு இங்கே.

Wednesday, April 30, 2008

நீங்கள் (அடிக்கடி) கேட்பவை...10-லிருந்து 1-று வரை.வலைப்பூ பெப்சி! இது செமக் கூலு மச்சி!


வணக்கம்! வந்தனம்! சுஸ்-ஸ்வாகதம்! சு.ஸ்வேதா கம், இல்லைங்க. சுஸ்-ஸ்வாகதம்! ஒழுங்காப் படிங்க! :-)

வலைப்பூ பெப்சி!
இது செமக் கூலு மச்சி!

ரேடியோவில் ‘டாப் டென்’ பாடல்கள் கேட்டு டைம் பாஸ் செய்தவர்கள், நான் கடந்த பத்து நாட்களில் கேட்ட ‘டவுன் டென்’ டயலாக்ஸ் கேட்கவும்.

10
பசி வந்தா பத்தும் பறந்து போகும்.
(@ பத்து ரூபா இருந்தா பசி பறந்து போகும்ல.

@ ஆ!என் இதயத்தக் காணும். வேற ஒண்ணுமிலீங்க.ஒவரா ஹார்ட்ட டச் பண்ணி, அது முதுகு வழியாக் கீழ விழுந்துடுச்சு.நீங்க படிங்க, நான் குனிஞ்சு எடுத்துக்குறேன்)

9
‘ஒன்பது ரூபா நோட்டு’... நான் இன்னும் பாக்கலீங்க :-)
(@ யாருமே பாத்து இருக்க மாட்டாங்க.நோட்டு அச்சடிக்குறவன் கூடத் தான்.ஏன்னா அவன் குற்றவாளி.கோமாளி இல்ல, செல்லாத நோட்டு அச்சடிக்க.

@ ஸாரி கொஞ்சம் ஓவர் ஃப்ளோ ஆயுடுச்சு :-))

8
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா.
(@ அய்யய்யோ! அய்யய்யோ! உலகம் ‘காலக்ஸி’ குள்ள இருக்குன்னு சொல்லி எங்க டீச்சர் என்னய ஏமாத்திட்டாங்க.யு டூ டிச்சர்?

@ ஓஓஓஓஓஓ!
ஓஓஓஓஓஓ!
ஓஓஓஓஓஓ! இதுக்குப் பேருதாங்க ‘ஓஓஓஒ’-ன்னு அழுகுறது :-0)

7
அந்த மந்திரவாதி என்ன பண்ணுனான் தெரியுமா? ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கூண்டுல அந்தக் கிளிய அடைச்சு வச்சுடான்.
(@ ஏழு குண்டல வாடா! வெங்கட் ரமணா! கோவிந்தா கோவிந்தா!-ன்னு தாங்க பக்தி மயமா கதை சொன்னேன், எங்க வீட்டுக் குட்டிக்கு.ஆனா இந்தக் கதை தான் கடைசீல ஒர்க்கவுட் ஆச்சு.

@ நீங்க எல்லாம் எப்படி?.என்னது, வீட்டுக்கு, தூங்க வராம இருக்கத்தான் (ஓவர் டைம்) கதை சொல்லுவீங்களா?. வெரி பேட் பாய்ஸ் :p)

6
ஆறு மனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
(@ நோ கமண்ட்ஸ். சாமி, கண்ணக் குத்திடும்.

@ நோ கமண்ட்ஸ். சாமி, கண்ணக் குத்திடும்.)

5
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
(@ வளையும். ஐந்துலயும் வளையும் ஐம்பதுலயும் வளையும். ஐநூத்தி ஐம்பதிலயும் வளையும்.எத்தன வாட்டி 5 என்ற எண்ணை எழுதினாலும், கீழ வளச்சுதாங்க எழுதணும்.இல்லேனா அது 5-சே இல்லை.வெறும் நேர்கோடு ,மேல் கோடு - மட்டும் தான்.

@ நன்றி.நன்றி.என்னது? இந்த அறிய கண்டுபிடிப்புக்கு வீடு தேடி வந்து விருது தறீங்களா. அட்ரஸ் வேணூமா?.ஹி..ஹி..ஹி..இந்த மாதிரி எத்தன வாட்டி ஏமாந்திருப்பேன்.விருது ஆட்டோவுல வரும்னு தெரியும்.அஸ்கு புஸ்கு)

4
நாலு பேரு தப்பாப் பேச மாட்டாங்க?
(@ தோடா! தமிழ் நாட்டுல பாதிப்பேரு தமிழத் தப்பாத் தான் பேசுறாங்க.நாலு பேர் தான் தப்பா பேசுறாங்கனு சொல்லுறது ரொம்பத் தப்பு

@ ‘தோடா’ என்பது தமிழ்ச் சொல் என நம்பி, தமிழைத் தப்பா ‘எழுதும்’ நாலு பேரில் நானும் சேர்கிறேன்.)

3
நான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்.
(@ ஒ! முயலுக்கெல்லாம் கால் பண்ண ஆரம்பிச்சுட்டியா? மொபைல் தான் இந்தியா முழுவதும் ஒரு ரூபாய், லோக்கல் எல்லாம் இலவசம்னு ஆயுடுச்சே.நடத்து நடத்து.

@ ஆமா! முயலோட எந்த மொழில பேசுன?)

1
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்...
(@ நான் எப்பவுமே சிங்கிள் தாங்க. ‘ஒண்ணா’ தான் அதாவது தனியா தான் இருக்கேன்.ஹி..ஹி..ஹி..

@ இதுக்கு சிங்கள் கமெண்ட் தான்... ...அஸ்கு புஸ்கு)

பி.கு.: @, @-னு போட்டு அட்ட டைம் ரெண்டு கமெண்ட் நானே போட்டுக்கிட்டதாலயும்,

ரெண்டாவது எண் உள்ள டயலாக்க மறக்காம மறந்துட்டதாலயும் இந்தப் பதிவ ‘இரண்டில்லா மொக்கை மாதிரினு’ சொல்லி, வ.வா.ச. போட்டிக்கு சமர்ப்பிக்கிறேன். ;-)

தலைப்புல ‘ரெண்டு’ இருக்கணும்னு அவசியம் இல்லனு சொன்னதால, பதிவுலேயே ‘ரெண்டு’ இல்லாம எழுதி, எல்லாரையும் ‘ரெண்டு’ எங்கன்னு தேட வெச்சதால, போட்டி விதிகளின் படி, பதிவின் கருவில், ஐ மீன் , ‘மொக்கையின் கரு’-வில் ‘ரெண்டு’ கொண்டு வர, பாடு பட்ட எனக்கு, எல்லாரும் ‘மொத்த’ ஸாரி மொத்தமா கருத்துச் சொல்ல பின்னூட்டத்திற்கு வரவும்.

இது தேறுமா என்று சொல்லவும். நன்னி.:-)


பி.கு.:இரண்டு பதிவு போட வேண்டும் என்பது போட்டியின் விதி.கடைசி நாள் நெருங்குவதால், என்ன எழுதுவது என்று '10'சன் ஆனதால் வந்த '10' இது.கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குங்க :D.

இதே போட்டிக்கான மற்ற இரண்டு பதிவுகள் இங்கும் இங்கும்.

ஒரே ஒரு கதை - வ.வா.ச. போட்டிக்கு... ... ...


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கதைத் தலைப்பு : ‘ஊடல்’ (அ) ‘விரிசல்’

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காதே.

மலயருக்குக் கோபம்; ஆத்தங்கரைப் பக்கம் நடை.

மங்கலா, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எதிர்ப்புறம்.

சண்டைக்கு ஒரு அளவில்ல.எல்லாரும் மனுசங்க தானே.மனசு ஒத்துதானே ஆரம்பிச்சுது.இப்ப இல்லேனா எப்படி?

ரெண்டா இருக்குற மனச ஒண்ணாக்கலாம்னு ஆரம்பிச்சசுதுதானே. இப்ப தொட்டது குத்தம்னா எப்படி?. இந்த நூற்றாண்டுலயும் இப்படியா?

அரசமரத்தடியில கூடிக் கூடிப் பேசுனப்ப நல்லாத் தானே இருந்துச்சு. முழு சம்மதம்னு சொல்லிதானே,சிரிச்சு சிரிச்சு பேசுனது.

திருவிழா நேரம்.கோயில் தேர, இரண்டு, பக்கமும் சேர்ந்து நின்னு இழுத்தா கைகள் ஒண்ணாச் சேரத்தானே செய்யும். இப்ப, கண்ணக் கசக்கி கிட்டு ‘ஆ! ஆத்தா வையும்.இது தப்பு’- னா எப்படி.

தொடப்புடாதாம்ல.அது சரி!

ஏன்?

சண்ட முத்திப் போய் இப்ப ஊரே ரெண்டு பட்டுக் கெடக்குனா பாத்துக்குங்க.மலயர் ஒரு பக்கம்.மங்கலா(ர்) ஒரு பக்கம்.

கதைத்தலைப்பு : ‘விரிசல்’ (அ) ‘ஊடல்’.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இது காதல் கதையா? ஆமாம் என்பவர்கள் இதை,இந்தக் கதையை, கடைசி பத்தியில் ஆரம்பித்து முதல் பத்திவரை, வரிசை மாற்றிப் படிக்கவும்.தலைகீழா இல்லைங்க. பத்தி வரிசை மட்டும் மாத்துங்க.வரிகள அப்படியே படிங்க. இப்ப கீழ், ஊதா, வரிலேர்ந்து ஆரம்பிங்க.போங்க.

படிச்சுட்டீங்களா? இல்லையா?.படிச்சுட்டு வாங்க.மத்தத அப்புறம் பாக்கலாம். ’ஸ்க்ரோல் அப் ப்ளீஸ்’

ஆச்சா? :-),இப்ப சொல்லுங்க இது காதல் கதையா? இல்ல சாதிக் கலவரமா?


பி.கு.:ஸ்ஸ்ஸ்ப்பாஆஆஅ! மூளையக் கசக்கிக் கசக்கி, சுண்டக்கா சைஸ்ல இருந்தது இப்ப கடுகு சைஸ் ஆயுடுச்சு.நல்லா இருந்தா, நல்லவங்க எல்லாரும் பின்னூட்டம் போடுங்க. சந்தோஷமா இருந்தா மூள வளரும்னு பக்கத்து வீட்டு நர்ஸ்சம்மா சொல்லுச்சு! ;-).

இதே போட்டிக்கான மற்ற இரண்டு இடுகைகள் இங்கும் இங்கும்.

Friday, April 25, 2008

நி.சி.பி. - பாகம் II. தமிழ் அறிய என்ன செய்யலாம்? நடைமுறைக்கு ஒத்துவருபவை எவை?


வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்
அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!
எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!

அழுத்தம் திருத்தமாய், தெளிவான உச்சரிப்பு வேண்டுமென்று, இரண்டு வீடுகள் கேட்டும் வரை, சிறுவயதில் ஓங்கிப் பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது.எல்லாப் பேச்சுப்போட்டிகளுக்கும் முன்னால் நின்று பெயர் கொடுத்துவிடுவேன்.எழுதிக் கொடுக்கத்தான் அம்மா இருக்கிறார்களே.:)

5 நிமிடம் பேச வேண்டுமானால் 5 பக்கங்கள் வேண்டும்;முன்னுரை மேற்கோளோடு தொடங்கினால் கேட்பவரை நிமிர்ந்து உட்கார வைக்கலாம்;கணீரென்று பேச வேண்டும், திருத்தமாகப் பேச வேண்டும்;இது தமிழுக்கு அழகு.

எனவே, மறுதலிக்காத சொற்கள், எளிய உச்சரிப்பு, சலனமிலா நீரோடை போன்ற நடை, தலைப்பை விட்டு விலகாத கருத்து -இப்படி இருக்க வேண்டும், 5 பக்கங்களும்.அம்மா ஒரே மூச்சில் எழுதி முடித்துவிடுவார்,கருத்தை.மற்றதை, நான்கைந்து முறை சண்டை போட்டு, இருவருமாகக் கொண்டு வந்துவிடுவோம்.

இப்பொழுது நினைத்தாலும் இனிமையாக இருக்கிறது. அம்மா சொல்லுவார், ‘நிழலின் அருமை வெயிலில்; நட்பின் அருமை பிரிவில்’. இப்பொழுது இல்லை எனும் பொழுது அதிகமாக ஆசைப் படுகிறது மனம்.

இது நான் முன்னர் எழுதிய, ‘நிற்க! சிந்திக்க! பின்னூட்டமிடுக’ என்ற பதிவின் இரண்டாம் பகுதி.அந்தப் பகுதி படிக்காதவர்கள், இங்கே செல்லவும். படித்ததும் 'back' செய்து, இங்கேயே வரவும் :).

இன்று என்னைப் போன்று,இந்தியாவை விட்டு, தமிழ்ப் பேசா நாட்டிற்கு வந்துவிட்ட அல்லது தமிழ்நாட்டை விட்டு தமிழ் இல்லா ஊருக்கு மாற்றலாகிவிட்ட, ‘தமிழ் பேசத் தெரியாத இரண்டாம் தலைமுறை’ உடையவர்கள், என்ன செய்யலாம்? என்பதே அந்த முதல் பதிவின் கேள்வி.

இரண்டாம் தலைமுறையின் நடைமுறைக்கும் நமக்கும் ஒத்துவரும்படியான ‘தமிழ் கற்கும்’ வழிகள் என்ன? என்று வலயுலகில் தேடிய பொழுது, திரு.வி.சுப்பரமணியம் என்பவர், தன்னுடைய இந்தப் பதிவில் http://www.geocities.com/tamilclassnj/tips.html, அவ்வழிகள் சிலவற்றை அட்டவணையிட்டுருந்தார்.அவர் அனுமதியுடன் அதன் சாராம்சத்தை என் நடையில் இங்கு அளிக்கிறேன்.

முதல் காரணம்: வீட்டில், பெற்றோர் தமிழ் பேசுவதில்லை.

ஏன்:

ஏன் 1: தாய் தந்தை இருவரில் ஒருவருக்குத் தமிழ் தெரியாமல் இருக்கலாம்

ஏன் 2: அல்லது தாய் தந்தை இருவருமே தங்கள் பள்ளிப் பருவத்தில் தமிழ் கற்காமல் இருக்கலாம்

ஏன் 3: அல்லது தாய் தந்தை இருவருமே, பல ஆண்டுகளாகத் தமிழ்ப் பேசா ஊரிலேயே வசிப்பதால், ஆங்கிலம் அல்லது அந்த ஊரின் மொழிக்கே அவர்களும் மாறி இருக்கலாம்.

இதற்கு என்ன செய்யலாம்?

தாய் தந்தை இருவரில் ஒருவருக்குத் தமிழ் தெரியவில்லை என்றாலும் இருவருக்குமே தமிழ் பழக்கம் இல்லை என்றாலும், நீங்கள் உங்கள் உறவினரோடும் தமிழ் அறிந்த நண்பர்களோடும் தமிழிலேயேப் பேசுங்கள்.பிள்ளைகளை,அவர்களுடன் தமிழில் பேசுமாறு உற்சாகப்படுத்துங்கள்.நீங்கள் தான் உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டு.உங்களைப் பார்த்து அவர்களும் உங்களுடன் போட்டியிடத் தயாராவார்கள்.

வீட்டில் யார், தமிழ் சரளமாகப் பேசுகிறார்களோ அவர்களுக்குப் பரிசு என்று சொல்லுங்கள்.அண்ணாவுக்கு ஒரு ஸ்டிக்கர், அப்பாவுக்கு ஒரு ஸ்டிக்கர்,கடைக்குட்டிக்கு ஒரு ஸ்டிக்கர் என்று கொடுங்கள்.10 ஸ்டிக்கருக்குப்பின் ஒரு பரிசு உண்டென்று சொல்லுங்கள்.தமிழ் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.

பெற்றோர் முதலில் இதைச்செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகளோடு வீட்டில் தமிலேயேப் பேசுங்கள், தமிழ் அறிந்த நண்பர்கள், உறவினர் அனைவரிடமும் நீங்களும் தமிழிலேயேப் பேசுங்கள்.பிள்ளைகளுடன் நீங்களும் அ-னா,ஆ-வன்னா படியுங்கள். :).

விளையாட்டு நேரம் போல் , ‘தமிழ் நேரம்’ வையுங்கள். இடையிடே தமிழில் (நல்ல) சினிமாப் பாடல்கள் போட்டுவிடுங்கள்.முதலில் ஆட ஆரம்பிப்பார்கள், பிறகு அர்த்தம் கேட்பார்கள், பிறகு, தானே பாடுவார்கள்.

தமிழ் படிக்கத் தெரியாத தாய் தந்தையரால் நிச்சயமாக இந்தப் பதிவை படிக்க இயலாது :). படிக்கும் நீங்கள் இதை அவர்களுக்குப் படித்துச் சொல்லுங்கள். இல்லை என்றால் திரு.சுப்பிரமணியன் அவர்களின் வலைச்சுட்டியை அவர்களுக்குக் கொடுங்கள்.

காரணம் இரண்டு:பெற்றோர் தமிழ் பேச விரும்புவதில்லை.

ஏன்:

பிள்ளைகள், வேறு நாடுகளிலெயே அல்லது இந்தியாவின் வேறு மாநிலங்களிலெயே வாழப்போவதால் தமிழ் அவசியமில்லை என நினைத்து சில பெற்றோரே , தமிழைப் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று சொல்லுகின்றனர்.

இதற்கு என்ன செய்யலாம்?

இது முற்றிலும் தவறு. பெற்றோராகிய நாம், மொழியை மறந்தாலும் நம் பழக்க வழக்கம், உணவு முறை, மதம்(நம்பிக்கை இருந்தால்:)), நம் உடை, நம் மணவாழ்க்கை முறை இதை எதையும் மறப்பதில்லை.

நம் தாய்மொழி வேண்டாம் என்று நாம் ஆரம்பிக்கும் ஒரு வழக்கம், வளர்ந்து விட்ட நமக்கு, எந்த ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

ஆனால் அது வளரும் பிள்ளைகளைக் குழப்பும். வெளி ஆட்களின் நடுவே வளரும் அவர்களின், ‘தனித்தன்மை’யைக் கேள்விக்குறி ஆக்கும். நம் கலாச்சாரத்தில், இதை எடுத்துக்கொள் அதை விட்டுவிடு என்றால் அவர்களின் குழப்பம் இன்னும் அதிகமாகும். அவர்களுக்கு, அவர்கள் வாழும் நாட்டின், மாநிலத்தின், மக்கள் மட்டும் நண்பர்கள் அல்லவே.தமிழ் பேசும் குடும்பங்களும்,அந்தக் குடும்பங்களில் உள்ள , உங்கள் பிள்ளைகளின் வயதை ஒத்த பிள்ளைகளும் கூட நண்பர்கள் தானே.இவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை என்றால், தமிழ் நண்பர்களோடு எப்படிப் பேசுவார்கள். முதலில் எப்படித் தமிழ் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வார்கள்.தங்கள் காலாச்சாரக் குழப்பங்களைத் தங்கள் வயதொத்தவர்கள் அனைவரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்று தமிழ் அறியாமலேயே எப்படி அறிவார்கள்.

நீங்கள் வாழும் இடத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வழிகாட்டல் உருவாக்க மிக அடிப்படைத் தேவை தாய்மொழி அவசியம் என்ற உணரல்.

அதை மிக எளிய முறையில் எப்படிச் செய்வது என்பது அடுத்த வாரம்,அடுத்த பதிவில். நம் சக வலைகளாகிய குட்டீஸ் கார்னரிலும், பேரண்ட்ஸ் கிளப்பிலும் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்... ...:).(இன்னும் அவர்களுக்கே, சொல்லவில்லை , பேச வருகிறேன் என்று :p). அதுவரை, இதைக்கேளுங்கள்..

தொடரும்... ...

பி.கு.: இதைச் செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தின் விளைவு தான் இந்தப் பதிவு.இதைத் தான், செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. :).பிடித்திருந்தாலும், வேறு ஆலோசனைகள் இருந்தாலும் பின்னூட்டமிடுங்கள்.:-)

Friday, April 18, 2008

இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் - புதிர் விடைகள்

இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் - புதிர் விடைகள்


படமாகப் போட்டுவிட்டேன். படம் மேல் கிளிக் செய்து பெரிதாகப் பார்க்கவும்.




















முதல் தவறு
: தலைப்பிலேயே உள்ளது. 'சுட்டி' என்பது 'பதிவு' என்று இருக்க வேண்டும். சுட்டி = pointer or Link. பதிவு = Post.

இரண்டாவது தவறு : காபி சாப்பிட முடியாது. குடிக்க வேண்டும்.

மூன்றாவது தவறு
: 'என்ன சந்தேகம்? வருசயாப் படிங்க' என்று சொல்லி, வரிசைப் படுத்தியிருக்கும் மூன்று கேள்விகளின் நம்பரிங் 1,2,3 என்று இல்லாமல் 1,3,4 என்று உள்ளன.

நான்காவது தவறு : 'புதுசு புதுசு கண்ணா' இல்லை 'புதுசு கண்ணா' மட்டும் தான்.அதாவது ஒரு 'புதுசு' எக்ஸ்ட்ரா. :-)

ஐந்தாவது தவறு : இதுவும் எக்ஸ்ட்ரா தான். அதாவது 'ஸ' என்ற தேவையற்ற எழுத்து ஓன்று உள்ளது.அது இருக்கக் கூடாது.

அவ்ளோதான். உத்னா ஹி ஹே. தட்ஸ் ஆல்.

ஹி..ஹி..ஹி..அடிக்கவரவுங்க, ஆட்டோ அனுப்புறவுங்க, அட்ரஸ் கேக்குறவுங்க எல்லாம்...இதப் ப்ளீஸ் படுச்சுடுங்க...

அதாவது...

ஐ மீன்...

பாத் ஏ ஹெ கி...

நான் ரெண்டு நாள் வில் பி சஃபரிங் ஃபரம்....

எஸ்கேப்....:D :D :D

பி.கு.: சரியா என் கடிகாரத்தில் மணி 11.56 P.M. :).தூக்கம் வருது. முடிவுகள் பின்னர். என்னது பதில் சொன்னது ஒரே ஒரு ஆள் தான் அதுக்கு என்ன பின்னரா?...ஹி..ஹி..ஹி...GN. SD. ;)

Thursday, April 17, 2008

காதலிக்கு வாழ்த்து! காதலனுக்கு வாழ்த்து! பெற்றோர்க்கு வாழ்த்து! கவிஞனின் ஆப்பு!

காதலிக்கு வாழ்த்து!
~~~~~~~~~~~~~~~~~
ஒற்றை ரோஜா அழகு!
கொடுப்பவர் கொடுத்தால்
இன்னும் அழகு...



அற்றைத் திங்கள் அழகு!
இருப்பவர் இருந்தால்
இன்னும் அழகு...

பற்றைத் துறப்பது அழகு!
பற்றாமல் (தீ) பற்றுவது
இன்னும் அழகு...

வெட்டை வெளித் தனிமை;
மொட்டை மாடி இனிமை;
சுட்டுவிட்ட நிலவு;
சுடும் கனவு;

யாவும் பெற்று கசிந்துருக வாழ்த்துகள்!
யாவும் கொடுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!



காதலுனுக்கு வாழ்த்து!
~~~~~~~~~~~~~~~~~~~
காதல் அழகு!
காதலி கிடைத்தால்
இன்னும் அழகு...


யமஹா அழகு!
பில்லியன் உயர்த்தினால்
இன்னும் அழகு...

பீட்சா அழகு!
க்ரெடிட்கார்ட் இருந்தால்
இன்னும் அழகு...

விட்டு விட்ட சிகரெட்;
கட்டி விட்ட ஃபோன்பில்;
சுட்டுவிட்ட நிலவு;
சுடும் கனவு;

யாவும் பெற்று கசிந்துருக வாழ்த்துகள்!
யாவும் கொடுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!


பெற்றோர்க்கு வாழ்த்து!
~~~~~~~~~~~~~~~~~~~~

பெற்ற பிள்ளைகள் அழகு!
பட்டம் பெற்றால்
இன்னும் அழகு...

கட்டிய வீடு அழகு!
படுத்ததும் வரும் தூக்கம்
இன்னும் அழகு...

கடமைகள் அழகு!
இனிதே முடிந்தால்
இன்னும் அழகு...



நீண்ட ஆயுள்;
நீடிக்கும் மகிழ்ச்சி;
நிறைய பேரப்பிள்ளைகள்;
நிம்மதியான உறக்கம்;

யாவும் பெற்று மகிழ்ந்திருக்க வாழ்த்துகள்!
யாவும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!


கவிஞனின் ஆப்பு!
~~~~~~~~~~~~~~~~

காதல் அழகு!
திருமணத்தில் முடிந்தால்
இன்னும் அழகு...

காதலன் அழகு!
(மாலையிட்ட பிறகும்)
மாறாமல் இருந்தால்
இன்னும் அழகு...




காதலி அழகு!
(மாலையிட்ட பிறகும்)
பேசாமல் இருந்தால்
இன்னும் அழகு...

தாய்தந்தை கனவு அழகு!
சற்று வளைந்து கொடுத்தால்
இன்னும் அழகு...

கவிதை அழகு!
பொய் கலந்தால்
இன்னும் அழகு...

கற்பனை அழகு!
தொடர்பில்லாமல் இருந்தால்
இன்னும் அழகு...

அழகோ அழகு!
அழகோ அழகு!
அழகோ அழகு!

பி.கு.: ‘இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும்’- போட்டியின் விடைகள் வெள்ளி இரவு 12:00 மணிக்கு அறிவிக்கப் படும். இன்னமும் யாரும் விடை சொல்லவில்லை என்றாலும். ;-)

Monday, April 14, 2008

இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் pls.


எல்லாருக்கும் வணக்கம்!

நான் வலைப்பூவுக்குப் புதுசு... ... ஆஹா, இந்தப் புராணத்த நிறைய வாட்டி, சொல்லிட்டேனோ?...சரி விடுங்க, அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே.(அப்படின்னு சொன்னப்புறம் ஹி..ஹி..ஹி..னு வழியறது மரபு).ஹி..ஹி..ஹி

இந்த வரியைப் படிக்குறவங்க, இந்தத் ‘த்’-தன்னாவை இப்பப் படிக்குறவுங்க, மனசாட்சி தொட்டு, சொல்லுங்க... ...நீங்க முதல் பதிவு போடும் போது (அதாவது என்ன மாதிரி புதுசா வலைப்பூவுக்கு வந்த போது... ...ஹி..ஹி..ஹி..), இந்த, சந்தேகம் எல்லாம் வந்ததா?

எந்த சந்தேகம்? வருசயாப் படிங்க... ...

1. எதடா எழுதுறது? சாப்ட்ட காபியையா?, சந்திச்ச இனா வானாவையா? சிரிச்ச ஜோக்கையா?
3. ஒரு post போட்டவுடனே... ... 15 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி, பின்னூட்ட status பாத்துக்குறது
4. அப்புறம், முக்கியமா, நம்ம blog template வித்தியாசமா இருக்கணுமேன்னு, எல்லார் வீட்டு blog-யையும் போய் எட்டிப் பாத்து, போன விஷயத்த மறந்து போய், அங்கன இருந்த post பூராவையும் படுச்சுப் போட்டு... ...

ஆஹா, அம்புட்டு பேரும் இம்புட்டு எழுதுறாங்களா... ...நம்ம blog-குக்கு யார் வருவான்னு... ...நொந்து நூலாகி, வெந்து வேர்க்கடலை ஆகி, ஒரு வாரம் கடையை இழுத்து மூடுறது

உண்மையா இல்லையா?

என்னாது இல்லையா...இதெல்லாம் அநியாமுங்க, ஏற்கனவே வெந்த வேர்க்கடலய, மிக்சீல போடாதீங்க. வந்து காப்பாத்துங்க. இதெல்லாம் சகஜம், இது ‘புதுசு புதுசு கண்ணா புதுசு’-களின் 'நியாயமான அறிகுறி' அப்புடின்னு எல்லாம் சொல்லுங்க... ஸ

பி.கு.: ஆமாமுங்க, இதுல 5 தவறுகள் இருக்குங்க (அதாவது எனக்குத் தெரிஞ்சு 5-ங்க)... ...என் சந்தேகத்துக்குப் பதில் சொல்லுற உங்களுக்கும் பொழுது போகனுங்களே... ...அதான் proof பாக்காம போட்டுட்டேன்... ...ஒரே ஒரு க்ளூ தாரேன்... ...கண்டிப்பா எழுத்துப் பிழையச் சொல்லலங்க.

Enjoy-ங்க. :). புடுச்சுருந்தா பின்னூட்டம் போடுங்க. பொழச்சுக்குவேன்.

இதற்கான விடைகள் இங்கே...

ஒலிக்கும்...

blogger templates 3 columns | Make Money Online